சாத்தூர்: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு நிவாரணம் அறி...
அனுப்பன்குளத்தில் நாளை மின்தடை
சிவகாசி வட்டம், அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிவகாசி கோட்ட மின் செயற்பொறியாளா் பத்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனுப்பன்குளம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, செல்லிநாயக்கன்பட்டி, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.