செய்திகள் :

``அனுமதி வாங்கி தான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்தேன்'' - டிஸ்மிஸ் ஆன CRPF வீரர் சொல்வதென்ன?

post image

ஜம்முவை சேர்ந்த முனீர் அகமத் என்பவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 2017-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மினால் கான் என்ற பென்னை 2022-ல் திருமணம் செய்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் சமீபத்தில் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து முனீர் அகமத் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்துவிட்டதாக கூறி அவரை பணியில் இருந்து மத்திய அரசு டிஸ்மிஸ் செய்துள்ளது.

இது குறித்து முனீர் கான் கூறுகையில், ''2022-ம் ஆண்டு டிசம்பர் மாதமே நான் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்யப்போவதாக எனது மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தேன். உடனே சம்பந்தப்பட்ட பெண்ணின் பாஸ்போர்ட், திருமண அழைப்பிதழ், அபிடவிட் போன்ற விபரங்களை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். நானும் எனது பெற்றோர், வி.ஏ.ஓ, மாவட்ட மேம்பாட்டுக்கமிட்டி உறுப்பினர் ஆகியோரின் கடிதத்துடன் திருமணத்திற்காக விண்ணப்பித்து அனுமதியும் பெற்றேன்.

கடந்த ஆண்டு மே 24-ம் தேதி ஆன்லைன் மூலம் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். திருமண புகைப்படங்களை நான் எனது உயர் அதிகாரியிடமும் கொடுத்தேன். கடந்த பிப்ரவரி 28-ம் தேதி மினால் கான் 15 நாள் விசாவில் இந்தியாவிற்கு வந்தார்.

அவருக்கு நிரந்தர விசா கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் 15 நாள் விசா முடிந்தவுடன் அவரை நாடு கடத்த அரசு முயன்றது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்து நாடு கடத்த தடை பெறப்பட்டது.

நான் விடுமுறை முடிந்து பணியில் சேர சென்ற போது என்னை போபாலுக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனர். நானும் உடனே அங்கு சென்று பணியில் சேர்ந்தேன். ஆனால் என்னை திடீரென பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை நான் மறைத்ததாக கூறி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளனர். இதை எதிர்த்து நான் கோர்ட்டில் மேல் முறையீடு செய்து நீதிபெறுவேன்'' என்று தெரிவித்தார்.

Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பாராட்டிய ஐஸ்வர்யா ராய்

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதன்மூலம் ஐ.பி.எல் தொடர்களில் அதிக முறை, 500 ரன்களுக்கு ... மேலும் பார்க்க

``திருமண செலவுக்கு போட்ட பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு சாலை..'' - எளிமையாக திருமணம் செய்த தம்பதி

திருமணம் என்றாலே பல லட்சம் செலவு பிடிக்கும். ஆனால் மகாராஷ்டிரா வாலிபர் ஒருவர் தனது திருமணத்தை அடுத்தவர்கள் பார்த்து பெருமைப்படும் அளவுக்கு செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சந்திராப்பூர் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

`தெரு விலங்குகளை பராமரிக்க MBBS படிப்பை விட்ட இளம் பெண்' - யார் இந்த த்ரிஷா படேல்?

விலங்குகள் மீதான அதீத பாசத்தால், இளம் பெண் ஒருவர் தனது எம்பிபிஎஸ் படிப்பை விட்டு விட்டு தெரு விலங்குகளை பராமரித்து வருகிறார். எம்பிபிஎஸ் படிப்பை விட்டதும் இல்லாமல், இந்த விலங்குகளை பராமரிப்பதற்காக தனத... மேலும் பார்க்க

Tata: மொபைல் கூட இல்லாமல், 2 BHK வீட்டில் வசிக்கும் ரத்தன் டாடாவின் தம்பி; காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் செல்வாக்கு மிக்க குழுமத்தில் ஒன்று டாடா குழுமம். இரும்பு முதல் சாப்ட்வேர் வரை வரை, ஹோட்டல்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை டாடா குழுமம் இல்லாத தொழில் இல்லை எனக் கூறுமளவுக்கு பரந்த நிறுவன வலையம... மேலும் பார்க்க

`ரூ.10,000 பந்தயம்' - 5 பாட்டில் மதுவை ராவாய் குடித்த இளைஞர்.. சவாலுக்காக உயிரை விட்ட பரிதாபம்..!

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள நன்கலி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). கார்த்திக்கும் அவரது நண்பர்கள் சிலரும் அமர்ந்து அடிக்கடி மது அருந்துவதுண்டு. அப்படி அவர்கள் மது அருந்த அமர்ந்... மேலும் பார்க்க

``social media-வை விட, நிஜ வாழ்க்கையின் மதிப்பு முக்கியம்..'' - Influencer மரணம் குறித்து டாப்ஸி

2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போ... மேலும் பார்க்க