பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
எந்த தேர்தலிலும் களம் காணாத பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது பாரபட்சமானது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக விவாதிக்க மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு சென்னை தலைமைச் செயலகத்தில் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் 8 தொகுதிகளை இழக்க நேரிடும் எனத் தெரிவித்தார்.
நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!
இதனால், பதிவு செய்யப்பட்ட 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 45 கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ள கட்சிகளின் பட்டியல் வெளியான நிலையில் நேரில் அழைக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.