செய்திகள் :

அனைத்து மக்களுக்கும் தலா ரூ.6000 நிவாரணம் வழங்க வேண்டும்: சி.வி. சண்முகம்

post image

விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித பாகுபாடும் காட்டாமல் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் வலியுறுத்தினார்.

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நிவாரணம் வழங்காததையும், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததையும் கண்டித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நகராட்சித் திடல் பகுதியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.வி. சண்முகம் பங்கேற்று பேசியதாவது:

ஃபென்ஜால் புயல் புதுச்சேரிக்கும் மரக்காணம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கே இருந்து நடவடிக்கை எடுத்ததாகக் கூறி போட்டோசூட் எடுத்துக் கொண்டனர். ஆனால், பெரும் மழை பெய்த விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் எந்த அமைச்சரும் முகாமிடவில்லை.

இதையும் படிக்க |அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழக்கும்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி விழுப்புரத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் தான் முதல்வர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்தார். அப்படி வந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவில்லை. மக்களை சந்தித்து ஆறுதல் கூற வில்லை. மண்டபத்தில் தங்க வைத்த பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கி விட்டுச் சென்றுவிட்டார்.

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அப்படி அறிவித்த நிவாரணத் தொகையும் முழுமையாக வழங்கப்பட வில்லை.

மக்களவைத் தேர்தல் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், ஏழை எளிய மக்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு ரூ.2000 மட்டும் நிவாரணம் .

ஏன் இந்த பாகுபாடு?

விழுப்புரம் மாவட்ட மக்கள் மீது ஏன் இந்த பாகுபாடு காட்டுகிறது திமுக அரசு என கேள்வி எழுப்பிய சி.வி. சண்முகம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 6000 நிவாரணத் தொகையும், நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். அதுபோல பாதிக்கப்பட்ட விவசாயப் பயிர்களைக் கணக்கெடுத்து உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் அர்ஜுனன், சக்கரபாணி, முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்று விண்ணில் பாய்கிறது தென்கொரியாவின் 3வது ராணுவ செயற்கைக்கோள்!

தென்கொரியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 3வது ராணுவ உளவுச் செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள வாண்டென்பர்க் விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ... மேலும் பார்க்க

இந்தியாவில் குறைந்துவரும் ஒட்டகங்கள்! உயர் அதிகாரி எச்சரிக்கை!

இந்தியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.பாலைவனத்தின் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்கள் நீண்ட காலத்திற்கு தண்ணீ... மேலும் பார்க்க

பாடல் வரிகளால் வந்த வினை... கவிஞர் எல் - பெஹைரி! கவிதைதான் குற்றம் - 9

‘’யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்குங் காணோம்......’’ எனப் பெருமிதமாக முழங்கினான் பாரதி. ‘யாமறிந்ந மொழிகளிலே...’ எனச் சொல்லுந்தரமும் தகுநிலையுங் கொண்டு, பன்மொழியறி பாவலனாக நின்றவன் அவன். இர... மேலும் பார்க்க

ஜாம்பியா அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இருவர் கைது!

ஜாமிபியா நாட்டு அதிபருக்கு செய்வினை வைக்க முயன்ற இரண்டு சூனியக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். தெற்கு ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவின் மக்களில் பெரும்பாலானோருக்கு சூனியம் செய்வினை ஆகியவற்றின் மீது அதீத நம்... மேலும் பார்க்க

கோவை அருகே சிலிண்டர் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

கோவை: கோவை தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்வதற்கு சமையல் எரிவாயு உருளையை ஏற்றிச் சென்ற லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பொதுமக்கள் துரிதம... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை தரவில்லை என்றால் மத்திய அரசுக்கு மக்கள் உரிய நேரத்தில் தகுந்த பதிலடி தருவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரி... மேலும் பார்க்க