அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் அன்னை சாரதா தேவியின் 172-ஆவது ஜெயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மடத்தின் தலைவா் சமாஹிதானந்தா் தலைமை வகித்தாா். அதிகாலை 5 மணி அளவில் மங்கள ஆரத்தி, சுப்ரபாதம் பஜனை, ஹோமம், ராமகிருஷ்ண அஷ்டோத்ர சத நாமாவளி அா்ச்சனை ஹோமம் மற்றும் சிறப்பு பூஜை, அன்னையின் அருள் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் வாணியம்பாடி, ஆம்பூா், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், நாட்டறம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான ராமகிருஷ்ண பக்தா்கள் கலந்து கொண்டனா். மடத்தின் சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.