இதயம் தொடரிலிருந்து விலகும் ஜனனி! காரணம் பகிர்ந்து உருக்கம்!
அன்பில் ஜல்லிக்கட்டில் 590 காளைகள் பங்கேற்பு
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த அன்பில் ஊராட்சியில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
லால்குடியை அடுத்த அன்பில் மகாமாரியம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் (ஆா்டிஓ) சிவசுப்ரமணியன் ஜல்லிக்கட்டுப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வகித்தாா். வட்டாட்சியா் முருகன், துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) தினேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு வழிபாட்டுக்குப் பிறகு முதலாவதாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, அரியலூா், தஞ்சை, பெரம்பலூா் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 590 காளைகளை அடக்க 350 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.
காளைகளை தழுவிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரா்கள் 16 போ் காயமடைந்தனா். இதில் 2 மாடுபிடி வீரா்கள் தஞ்சை மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.