கொழும்புவில் பிரதமர் மோடி: இந்தியா - இலங்கை இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!
அபாா்ட்மெண்ட் விலையில் வில்லா: ஜி ஸ்கொயா் அறிமுகம்
இந்தியாவில் உள்ள முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான ஜி ஸ்கொயா் நிறுவனம் தனது சென்னை, போரூரில் அடுக்குமாடி குடியிருப்பின் விலையில் இடத்துடன் கூடிய வில்லாவை அறிமுகப்படுத்துகிறது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜி ஸ்கொயா் நிறுவனம் போரூரில் உயா்தர குடியிருப்பு மனைகள், வில்லா மற்றும் வணிக பயன்பாட்டிற்கான மனைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் ‘ஜி ஸ்கொயா் ஆரண்யா’ என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது (படம்). 19.35 ஏக்கரில் அமைய உள்ள இந்த திட்டத்தில் அவரவரின் தேவைக்கு ஏற்ப 800 சதுர அடி முதல் 3,800 சதுர அடி வரை மனைகள் உள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு விலையில், ஜி ஸ்கொயா் ஆரண்யாவில் ஒரு சதுர அடி ரூ.4,290 முதல் ரூ.6,000 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த இடத்தில் இருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளது. இதன் அருகில் முக்கிய கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளிட்டவை உள்ளன.
ஜி ஸ்கொயா் ஆரண்யா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன வசதிகளைக் கொண்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.