செய்திகள் :

``அமரனா, வேட்டையனா..?'' தென்காசி மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்த 2 இளைஞர்கள் கைது!

post image

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், செங்கோட்டையைச் சேர்ந்த பீர் முகம்மது (30), சேக் முகமது (27) ஆகியோர், பிராங்க் செய்து வீடியோ எடுத்துள்ளனர்.

கையில் அடிபட்டு கட்டு போட்டதுபோல ஒருவர் நடிக்க, மற்றொருவர், அங்கு பணியாற்றும் நபரிடம், “படம் பிடிக்கணும். தியேட்டர் எங்க இருக்கு?” எனக் கேட்கிறார்.

ஸ்கேன் எடுக்க வழி கேட்கின்றனர் என்று நினைத்து அவர்கள் அதற்கான வழியை கூறி உதவி செய்கிறார்கள்.

பிராங்க் வீடியோ இளைஞர்கள்

பிராங்க் வீடியோ எடுக்கும் அந்த நபர், “அங்க அமரன் படம் ஓடுதா? வேட்டையன் படம் ஓடுதா?” என கிண்டலாக பேச, வழியை கூறி உதவி செய்த நபர் கோபமடைந்தார்.

 இந்த சம்பவத்தால் கோபமடைந்த மருத்துவமனை அதிகாரி, அவர்களின் செயலையும், வீடியோ எடுத்ததையும் கண்டித்துள்ளார். அந்த அதிகாரியை அவதூறாக பேசி உள்ளனர்.

இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனை அலுவலர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி அரசு மருத்துவமனையில் இளைஞர் ஒருவர் தனது கையில் அடிப்பட்டது போல கட்டுபோட்டுக் கொண்டு பிராங்க் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. உள் மாவட்டத்துக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து தென்காசி போலீஸார் விசாரணை நடத்தினர்.

பிராங்க் வீடியோ இளைஞர்கள்

போலீஸின்‌ விசாரணையில், மருத்துவமனையில் பிராங்க் வீடியோ எடுத்து வெளியிட்ட இளைஞர்கள் செங்கோட்டையை சேர்ந்த பீர் முகம்மது, சேக் முகம்மது என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பொது இடங்களில் இதுபோன்று பிராங் வீடியோ எடுத்து வெளியிடும் செயல்களில் ஈடுபட வேண்டாம்" என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவித்தனர்.

"யூடியூப்சேனல் நடத்துபவர்கள் சிலர் 'பிராங்க் வீடியோ' என்ற பெயரில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும். அதுவும் மருத்துவமனை போன்ற இடங்களில் இவ்வாறு நடப்பது மிகவும் வேதனையானது" என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

Instagram, Facebook, X: 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை.. எங்கே?

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாதபடி ஆஸ்திரேலியா அரசு சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது. சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அதனை தடை செய்ய உர... மேலும் பார்க்க