மாணவர்களை மிரட்டி தன்பாலின உறவு; விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட மூவர் கைது- தாராபுர...
Instagram, Facebook, X: 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை.. எங்கே?
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உள்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த முடியாதபடி ஆஸ்திரேலியா அரசு சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது.
சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அதனை தடை செய்ய உரிய நேரம் இதுதான் என்றும் ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டம் அவை உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டு 12 மாதங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் நடைமுறைக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளி விவரங்களின்படி, ஆஸ்திரேலியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 94% மக்கள் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அதில் 81% மக்கள் சமூக வலைதளங்களில் கணக்கை வைத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இணையதளத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் 16 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளது ஆஸ்திரேலியா அரசு.
இந்த சட்டத்தின் படி, பிரபல சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யுடியூப் உள்ளிட்ட தளங்கள் சட்டவரம்புக்குள் கொண்டுவரப்பட்டு, இதனை 16 வயதிற்கும் குறைவானவர்களை பயன்படுத்த முடியாதபடி விதிகள் கொண்டுவரப்பட உள்ளது.
பெற்றோர்களின் அனுமதி இருந்தாலும் சமூக வலைதளங்களை குழந்தைகள் பயன்படுத்த முடியாதபடி சட்டம் கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் மைக்கேல் ரவ்லேண்ட் தெரிவித்துள்ளார்.
தொடர் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்பாட்டினால் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுவதாலும், சமூக வலைதள பயன்பாடு அவர்களுக்கு தீங்கு விளைவிப்பதின் காரணமாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகள் நம் நாட்டிலும் கொண்டுவரப்பட வேண்டுமா? உங்கள் கருத்துகளை கமண்டில் தெரிவியுங்கள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb