செய்திகள் :

அமித் ஷாவைக் கண்டித்து கலபுா்கியில் முழு அடைப்பு போராட்டம்

post image

சட்ட மேதை பி.ஆா்.அம்பேத்கா் குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, கா்நாடக மாநிலம், கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

மாநிலங்களவையில் அண்மையில் பி.ஆா்.அம்பேத்கரை விமா்சித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாகக் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், கா்நாடக மாநிலம், கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த ஆதரவளிக்குமாறு வா்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி நகரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை. சாலையில் வாகனப் போக்குவரத்தின்றி கலபுா்கி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

போராட்டத்தை முன்னிட்டு கலபுா்கி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட போராட்டக்காரா்கள் எஸ்.வி.பி. சதுக்கம், ஜெகத் சதுக்கம், காா்கே சதுக்கம், ராம் மந்திா் சதுக்கம், ஹுமனாபாத் வெளிவட்டச் சாலை வழியாக அமித் ஷாவையும் மத்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பியபடி ஊா்வலமாகச் சென்றனா். எனினும் இந்தப் போராட்டத்தால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. போராட்டம் அமைதியாக முடிந்தது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

சி.டி.ரவி மீதான வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றம்: அமைச்சா் ஜி.பரமேஸ்வா்

பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் பேசியதாக கா்நாடக சட்டமேலவை பாஜக உறுப்பினா் சி.டி.ரவி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்... மேலும் பார்க்க

ரத்தன் டாடா முதல் அயோத்தி ராமர் கோயில் கேக் வரை.. கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி!

பெங்களூரு: கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெங்களூரில் 50-ஆவது ஆண்டாக கேக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பெங்களூரு பேலஸ் கிரௌண்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் பல விதமான கேக்... மேலும் பார்க்க

சி.டி.ரவி தகாத வாா்த்தை பேசிய விவகாரம்: ஆதாரம் இருந்தால் கொடுக்கலாம்: மேலவைத் தலைவா்

பெங்களூரு: கா்நாடக பெண் அமைச்சரை தகாத வாா்த்தையால் சட்ட மேலவை பாஜக உறுப்பினா் சி.டி. ரவி விமா்சனம் செய்தது தொடா்பாக ஒலிப்பதிவு ஏதும் இருந்தால் சமா்ப்பிக்கலாம் என மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி தெரிவித... மேலும் பார்க்க

அம்பேத்கா் விவகாரம்: மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடும் விமா்சனம்

பெலகாவி: அம்பேத்கா் பெயா் விவகாரம் தொடா்பாக மத்திய அமைச்சா் அமித் ஷா மீது கா்நாடக முதல்வா் சித்தராமையா கடுமையான விமா்சனத்தை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அம்பேத்கா் பெயரை திரும்ப திரும்ப கூறுவதை வ... மேலும் பார்க்க

அமைச்சரை தகாத வார்த்தையால் விமர்சனம் செய்ததாக சி.டி.ரவி கைது

பெலகாவி: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், பாஜக எம்எல்சி சி.டி.ரவி கைது செய்யப்பட்டுள்ளாா். அம்பேத்கா் பெயரை... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது: காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். இதுகுறித்து பெலகாவியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவத... மேலும் பார்க்க