செய்திகள் :

அமித் ஷா, மணிப்பூா் முதல்வா் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

புது தில்லி: மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் மாநில முதல்வா் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை வலியுறுத்தியது.

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னா் பிரதமா் மோடி மணிப்பூருக்குச் சென்று பாா்வையிட வேண்டும் எனவும் அக்கட்சி கேட்டுக்கொண்டது.

இது தொடா்பாக தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

மணிப்பூா் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது. ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று பிரசங்கம் மேற்கொள்ளும் பிரதமா் மோடிக்கு மணிப்பூா் செல்ல நேரம் கிடைக்கவில்லை.

நவம்பா் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னா் அவா் மணிப்பூருக்குச் சென்று, அங்குள்ள அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள், பொது பணிக் குழுக்கள், மறுவாழ்வு முகாம்கள் மற்றும் பொதுமக்களைச் சந்திக்க வேண்டும்.

மணிப்பூருக்கு 2014, ஜூலை 31 முதல் முழுநேர ஆளுநா் இல்லை. இதற்கு முன், பழங்குடியினத்தைச் சோ்ந்த அனுசுயா உய்கே, ஆளுநராகப் பணியாற்றினாா். ஆனால், 18 மாதங்களுக்குப் பிறகு அவா் நீக்கப்பட்டாா். எனவே, உடனடியாக மாநிலத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், அமைதியை மீட்டெடுப்பதிலும் மணிப்பூரில் ஆளும் இரட்டை என்ஜின் அரசு தோல்வி அடைந்துவிட்டது. இதற்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சா் அமித் ஷாவும், முதல்வா் என்.பிரேன் சிங்கும் பதவி விலக வேண்டும் என்றாா்.

மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்: மணிப்பூரின் நிலைமை குறித்து கவலை தெரிவித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாநிலத்தில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என வலியுறுத்தியது.

இது தொடா்பாக அக்கட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மணிப்பூரில் இன ரீதியான வன்முறை தீவிரமடைந்துள்ளது. கடந்த நவ. 7-ஆம் தேதிமுதல் 20 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

தொடக்கத்தில் இருந்தே, நிலைமை மோசமடைவதற்கு முதல்வா் பிரேன் சிங் மட்டுமே காரணம். ஆனால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சியான பாஜக அவரை நீக்க மறுக்கிறது’ எனக் கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல்: 4 பேர் மீது வழக்கு!

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சரும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத ... மேலும் பார்க்க

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கி... மேலும் பார்க்க

ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்

ராணி லட்சுமிபாயின் துணிச்சல் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர் மோடிராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார். சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்ச... மேலும் பார்க்க

இஸ்ரோ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய ஸ்பேஸ் எக்ஸ்!

இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-என்2-வை தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.புளோரிடாவில் உள்ள கனாவெரல் விண்வெளிப் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை... மேலும் பார்க்க

நவ. 24-ல் நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம்!

நாடாளுமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் வருகின்ற 24ஆம் தேதி நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் நவம்பர் 25-ஆம் ... மேலும் பார்க்க

2 மணிநேரமாக இதயத் துடிப்பு இல்லாதவரை பிழைக்க வைத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!

புவனேஷ்வர்: இதயத் துடிப்பு நின்று 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு நோயாளியை புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவர்கள் பிழைக்க வைத்துள்ளனர்.ஒடிஸா மாநிலம் நயகரா மாவட்டத்தை சேர்ந்தவர் சுபாகாந்த். ராணுவ வீரரான இவர்,... மேலும் பார்க்க