செய்திகள் :

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

post image

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி பிரவின் (வயது 26), ஹைதரபாத்தில் தனது இளநிலை படிப்பை முடித்த இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் தனது முதுநிலை படிப்பை பயின்று வந்தார்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 5) பிரவினின் பெற்றோரை தொடர்புக்கொண்ட அந்நாட்டு அதிகாரிகள் பிரவீன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்த அவரது பெற்றோர்கள் தெலங்கானா எம்எல்ஏக்கள் உள்ளிட்ட தலைவர்களிடன் உதவிக்கேட்டு அனுகியுள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்த பிரவின் குமார் கடந்த ஜனவரியில்தான் திரும்ப சென்றுள்ளார். மேலும், நேற்று (மார்ச் 5) அதிகாலை பிரவின் அவரது தந்தைக்கு செல்போன் மூலம் அழைத்திருந்ததாகவும், ஆனால் அவரது குடும்பத்தினர் தூங்கிக்கொண்டிருந்ததினால் அந்த அழைப்பை எடுக்க முடியவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் குறித்த முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படாத நிலையில், அங்குள்ள ஒரு கடையில் பிரவின் குமாரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் அவரது உடலில் துப்பாக்கிக் குண்டு காயங்கள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, சிகாகோவிலுள்ள இந்தியத் தூதரகம் தங்களது இரங்கலைத் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்தினருடன் தொடர்பிலுள்ளதாகவும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவில் பயின்று வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் கடந்த 2024 நவம்பர் மற்றும் 2025 ஜனவரியில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவணந்தப்புரத்தின் தும்... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க