தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கை அதிபரிடம் முதல்வர் கோரிக்கை!
அமைச்சர் பதவி மறுப்பு! கட்சிப் பதவியிலிருந்து சிவசேன எம்எல்ஏ விலகல்!
மகாராஷ்டிரா: அமைச்சரவையில் இடம்பெறாததினால் சிவசேனை எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகர் அக்கட்சி பதவிகள் அனைத்தையும் ராஜிநாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியமைத்தது. அவரது அமைச்சரவையில் பிரதான கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கும் பங்களிக்கப்பட்டு ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சரானார். அவருடன் 11 சிவசேன எம்.எல்.ஏ.க்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பந்தாரா தொகுதியில் 38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சிவசேன எம்.எல்.ஏ நரேந்திர போண்டேகருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாததினால் அவர் சிவசேனையின் அனைத்து கட்சிப் பதவிகளிலிருந்தும் ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதற்கு முந்தைய தேர்தலில் வெற்றிப் பெற்று சுயட்சை எம்.எல்.ஏவாக அவர் பதவி வகித்தபோது ஷிண்டே தலைமையிலான சிவசேனையிற்கு அவர் ஆதரவளித்ததாகவும், அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று ஷிண்டே கொடுத்த வாக்கினை நம்பி இம்முறை அவர் சிவசேனையில் இணைந்ததாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்
மேலும், அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு அவரது பெயரை பரிந்துரைத்ததாக ஷிண்டே கூறியிருந்ததாகவும் ஆனால், அமைச்சரவை பட்டியலைப் பார்த்தப்போது அவரது பெயர் இடம்பெறாததினால் அவர் அந்த கட்சியின் எல்லாப் பதவிகளிலிருந்தும் விலகுவதாகவும் அதற்கான ராஜிநாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் கொடுத்துள்ளதாகவும் அவர்களது பதிலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைப் பதவி குறித்து அவர் கூறுகையில், பந்தாரா மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் இலாக்காவை அவர் கேட்டதாகவும், இதுவரையில் அந்த மாவட்டத்திற்கான பொறுப்பு அமைச்சர் பதவியிலிருந்தவர்கள் அனைவரும் வெளி மாவட்டதைச் சேர்ந்தவர்கள் என்பதினால் அம்மாவட்டத்தினுள் இருக்கும் பிரச்னைகள் எதுவும் அவர்களுக்கு தெரிய வருவதில்லை எனவும் அம்மாவட்டத்தின் வளர்ச்சி மேம்பாட்டிற்காகவே அவர் அந்த பதவியைக் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அரசின் அமைச்சரவையில் 19 பாஜக எம்.எல்.ஏ.க்களும், ஷிண்டே - சிவசேனையில் 11 எம்.எல்.ஏ.க்களும் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (அஜித் பவார்) 9 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.