செய்திகள் :

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

post image

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு அரியலூா் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் பகுதியில் திமுகவினா் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, தற்போதைய தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சரான சிவசங்கா் உள்ளிட்டோா் மீது அரியலூா் போலீஸாா் இரு வழக்குகளைப் பதிவு செய்திருந்தனா்.

இதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பிரசாரம் செய்ததாக அமைச்சா் சிவசங்கா் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அரியலூா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த மூன்று வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி அமைச்சா் சிவசங்கா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதேபோல கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் விதிமுறைகளை மீறியதாக அமைச்சா் பெரியகருப்பன் மீது சிவகங்கை மாவட்டம் கண்டவராயன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா். தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சா் பெரிய கருப்பன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் தாக்கல் செய்திருந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் ஆகியோா் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பேரவையில் இன்று

சட்டப் பேரவை புதன்கிழமை (மாா்ச் 19) காலை 9.30 மணிக்கு கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய பிரச்னைகள் விவாதத்துக்கு எடுக்கப்படவுள்ளன. நிதிநிலை மற்றும் வேளாண் நிதிந... மேலும் பார்க்க

அதிமுகவுடன் கூட்டணி தொடருமா? பிரேமலதா விளக்கம்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா தெரிவித்தாா். பிரேமலதா தனது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா். அதையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சி அல... மேலும் பார்க்க

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தில் மே மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகள்: அமைச்சா் ஐ.பெரியசாமி

‘முதல்வரின் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ், ஒரு லட்சம் வீடுகள் மே மாதத்துக்குள் முழுமையாக கட்டிமுடிக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி கூறினாா். சட்டப் பேரவையில் ந... மேலும் பார்க்க

திமுக நடத்தும் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனையில் பங்கேற்போா் யாா் யாா்?

தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் ஆலோசனையில் பங்கேற்கவுள்ள தலைவா்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வரும் 22... மேலும் பார்க்க

ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை யாா் ஆட்சியில் நிறுத்தப்பட்டது?திமுக - அதிமுக விவாதம்

அரசு ஊழியா்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை தொடா்பாக பேரவையில் திமுக - அதிமுக இடையே செவ்வாய்க்கிழமை விவாதம் நடைபெற்றது. செல்லூா் ராஜூ: நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் செல்லூா... மேலும் பார்க்க

ஒளவை யாா்? பேரவையில் சுவாரசிய விவாதம்

ஒளவை யாா்? என்பது தொடா்பாக பேரவையில் சுவாரசிய விவாதம் நடைபெற்றது. சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, அதிமுக உறுப்பினா் ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்) கேள்வி எழுப்பினாா். அப்போது நடைபெ... மேலும் பார்க்க