சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! ஏற்றத்துடன் முடிந்த பங்குச் சந்தை!
``அம்மா தற்கொலை முயற்சி செய்யவில்லை...'' - காரணம் சொல்லும் பாடகி கல்பனாவின் மகள்!
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை, பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் அவரது ஹைதராபாத் இல்லத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.
இந்த நிலையில், அவரது தற்கொலை முயற்சி குறித்து பல்வேறு தகவல்கள் பரவிக்கொண்டிருக்க, அவரின் மகள் அத்தனையையும் மறுத்துள்ளார்.
அவர் மகள் கூறியதாவது, "என்னுடைய அம்மாவிற்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர் நன்றாகவும், சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார். அவர் ஒரு பாடகி. அவர் பி.எச்.டியும், எல்.எல்.டியும் படித்து வருகிறார். இதனால் அவருக்கு தூக்கமின்மை ஏற்பட்டுள்ளது.

இதை சரிசெய்ய, டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்து வருகிறார். இந்த மருந்துகள் ஓவர்டோஸ் ஆகியுள்ளது. அவ்வளவு தான். வதந்திகளை பரப்பாதீர்கள்.
இப்போது என்னுடைய அம்மா நன்றாக இருக்கிறார். அம்மாவும், அப்பாவும் சந்தோஷமாக இருக்கின்றனர். எங்கள் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கின்றனர். அம்மா சீக்கிரம் வீடு திரும்பிவிடுவார். இது தற்கொலை முயற்சி அல்ல" என்று பேசியிருக்கிறார்.
போலீசார் தகவலின் படி, கல்பனா தூக்கமாத்திரைகளை எடுத்துள்ளார். அதற்கான சிகிச்சையை தான் மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். இப்போது அவர் நலமாக இருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
