"ரூ.85,000 கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்திருக்கு..! " - கேள்வி எழுப்பும் அன்புமண...
அயோத்தி ராமர் கோயிலில் யோகி ஆதித்யநாத் வழிபாடு!
உத்தரப் பிரதேசத்தின், அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மற்றும் அனுமன் கர்ஹி கோயிலில் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு மேற்கொண்டார்.
ராமர் கோயிலில் அர்ச்சகர்கள் முதல்வரை வரவேற்று திலகமிட்டு சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.
முன்னதாக பல்ராம்பூருக்குச் சென்று சைத்ர நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனிடையே இன்று காலை துளசிபூரில் உள்ள சக்தி பீடமான படேஷ்வரி கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். அதன்பின்னர் ராமர், அனுமன் கோயிலில் வழிபாடு செய்தார்.