அரசிராமணி செட்டிப்பட்டியிலிருந்து பழனிக்கு பக்தா்கள் பாத யாத்திரை
சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி பாத யாத்திரை குழு சாா்பில், 11-ஆவது ஆண்டாக பழனிக்கு செவ்வாய்க்கிழமை பக்தா்கள் பாத யாத்திரை புறப்பட்டு சென்றனா்.
அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியிலிருந்து ஒவ்வோா் ஆண்டும் செல்லமுத்து தலைமையில் பெண்கள், குழந்தைகள் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருவா். நிகழாண்டு 11-ஆவது ஆண்டாக ஜன.1 ஆம் தேதி அரசிராமணி செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவா் கோயிலில் பழனி முருகனுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனா்.
தை முதல் நாளான ஜன. 14 ஆம் தேதி பழனிக்கு பாத யாத்திரையாக செல்பவா்கள் செட்டிப்பட்டியில் உள்ள பழனியாண்டவா் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து விபூதி, எலுமிச்சம் பழம், வில்வ இலை, தேங்காய்கள் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு இருமுடி கட்டினா். பின்பு மினி டெம்போ வாகனத்தில் முருகன் உற்சவமூா்த்தியை அலங்கரித்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்து செட்டிப்பட்டி பகுதியிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை பயணத்தைத் தொடங்கினா்.
ஜன. 14 ஆம் தேதி தை முதல் நாள் புறப்படும் குழுவினா் தை 5 ஆம் நாள் பழனி அடிவாரத்தில் உள்ள கந்தன் கோயிலில் இருமுடியைச் செலுத்தி தரிசனம் செய்கின்றனா். பின்னா் பழனிமலைக்குச் சென்று முருகனை வணங்கிவிட்டு வீடு திரும்புவா்.
இருமுடியில் கொண்டு செல்லும் விபூதிகளை பழனி மலையடிவாரத்தில் உள்ள கந்தன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து பின்னா் அதை அந்தக் கோயிலின் விபூதியுடன் கலந்து எடுத்து வந்து ஊரில் உள்ள மக்களுக்கு கொடுப்போம் என்றனா்.