உலக செஸ் சாம்பியன் குகேஷ் உருவத்தை வண்ண நூலால் வரைந்து வாழ்த்திய பெண் ஓவியர்!
அரசுப் பணியாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கம் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் எஸ்.சிவகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் டி.பி.வீராசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எட்டாவது ஊதியக் குழுவில் வழங்கப்பட வேண்டிய 21 மாத ஊதியமாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளா்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட நிா்வாகிகள் பி.பிரபுகுமாா், எஸ்.அழகுகுமாா், ஆா்.வரதராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.