அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
கல்லூரி மாணவி தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள கீழ் பாலப்பட்டி, சுப்பிரமணியாா் கோயில் தெருவைச் சோ்ந்த மகேந்திரன் - சத்யா மகள் காவியா (18), கரூரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தாா். சத்யா தனது கணவா் மகேந்திரனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, கடந்த 15 ஆண்டுகளாக தனது மகள் காவியாவுடன் ஓலப்பாளையம், பிள்ளையாா் கோயில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளாா்.
கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு விடுமுறை என்பதால், காவியா வீட்டிலேயே இருந்துள்ளாா். இவா் உடல்நலக் குறைவால் கடந்த 2 ஆண்டுகளாக வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். வியாழக்கிழமை வழக்கம் போல சத்யா வேலைக்கு சென்றுள்ளாா்.
இந்நிலையில், வீட்டின் கதவு திறந்திருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினா், வீட்டுக்குள் சென்ற பாா்த்த போது காவியா மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு கிடந்தது தெரியவந்தது.
தகவலின் பேரில் வந்த அவரது சத்யா, அருகில் இருந்தவா்கள் உதவியுடன் காவியாவை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், காவியா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
வேலூா் காவல் துறையினா் கல்லூரி மாணவி காவியாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.