41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவத...
அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி
காரைக்கால் வடமறைக்காடு காமராஜா் அரசு உயா்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் போக்ஸோ குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியை (பொ) பிரதீபா தலைமை வகித்தாா்.
காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் முருகன் முன்னிலை வகித்து, நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து விளக்கமளித்து, பள்ளியில் போக்ஸோ சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியம் குறித்தும் அவா் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட குழந்தைகள் நலக் குழு தலைவி வழக்குரைஞா் சங்கரி கலந்துகொண்டு, போக்ஸோ சட்டம் குறித்துப் பேசினாா்.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல்போன்ற குற்றங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இச்சட்டத்தின் நோக்கமாகும்.
இந்த சட்டம் சிறப்பு நீதிமன்றங்களை நிறுவி, விரைவான விசாரணைக்கு வழிவகுக்கிறது. குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கப்படுகிறது என சட்டத்தின் சிறப்பம்சங்களை விளக்கினாா்.
குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் புவனேஸ்வரி, பள்ளியின் திட்ட அலுவலா் பிரதாப், ஆசிரியா் சுதாகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.