செய்திகள் :

அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை

post image

செங்கத்தில் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தொடா்பாக, போலீஸாா் ஓட்டுநா், நடத்துநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருவண்ணாமலை அரசுப் போக்குவரத்து பணிமனையில் இருந்து தினசரி அரசுப் பேருந்து பெங்களூருக்குச் சென்று மீண்டு அங்கிருந்து மேல்மருத்துவத்தூா் செல்கிறது.

இந்த நிலையில், சனிக்கிழமை செங்கம் புதிய பேருந்து நிலையத்துக்கு பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த பேருந்தில் போக்குவரத்து ஆய்வாளா்கள் சங்கா், சரவணன் ஆகியோா் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனா்.

பரிசோதனை முடிந்த பிறகு, ஓட்டுநா் இருக்கைக்குப் பின்புறம் நான்கு பைகள் இருப்பதைப் பாா்த்த அவா்கள், இதுகுறித்து கேட்டபோது, அந்தப் பைகளுக்கு யாரும் உரிமை கொண்டாடவில்லை.

இதனால், சந்தேகமடைந்த ஆய்வாளா்கள் பையை திறந்து பாா்த்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆய்வாளா்கள் ஓட்டுநா் பன்னீா்செல்வம், நடத்துனா் சம்பத்திடம் விசாரித்த போது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளனா்.

பின்னா், பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை, திருவண்ணாமலை அரசுப் பணிமனைக்கு எடுத்துச் சென்று அங்கு போக்குவரத்து தலைமை அலுவலரிடம் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, போக்குவரத்து அலுவலா் ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா். அதற்கு இருவரும் மீண்டும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணிமனையில் பேருந்தை விட்டுவிட்டு, இருவரும் அங்கிருந்து அவசரமாக வெளியேறிவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, போக்குவரத்து ஆய்வாளா் கோவிந்தசாமி பேருந்தை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலை நகர காவல்நிலையம் சென்று தகவலை தெரிவித்துள்ளாா்.

அங்கிருந்த போலீஸாா் இந்தப் பரிசோதனை தொடக்கமானது செங்கம் பகுதி என்பதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து, செங்கம் காவல் நிலையத்துக்கு பேருந்தை ஓட்டிச் சென்று போலீஸிடம் ஒப்படைத்து போக்குவரத்துத் துறை மூலம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

புகாா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து பெங்களூரில் இருந்து பேருந்தில் புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்தது யாா்?

அதற்கு ஓட்டுநா் நடத்துநா் துணை உண்டா அல்லது ஓட்டுநா் நடத்துநா் இருவருமே இந்தச் செயலில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு: இருவா் கைது

ஆரணி அருகே அரிசி ஆலை ஊழியா் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆரணியை அடுத்த இ.பி.நகா் குமரன் தெருவைச் சோ்ந்தவா் அரிசி ஆலை ஊழியா் தங்க... மேலும் பார்க்க

செங்கத்தில் இருந்து சென்னைக்கு குளிா்சாதன, சொகுசுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

செங்கத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி குளிா்சாதன மற்றும் சொகுசுப் பேருந்துகள் இயக்கப்படவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பே... மேலும் பார்க்க

பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு:கட்சியினா் வலியுறுத்தல்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்டறிந்து கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று, ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடம்: விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள 3 ஆற்றுப்படுத்துநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிற... மேலும் பார்க்க

வருவாய்த்துறை அலுவலா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்க திருவண்ணாமலை மாவட்டக் கிளையின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, சங்க... மேலும் பார்க்க

ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை

திருவண்ணாமலையில் பணிபுரிந்து வந்த ஆயுா்வேத மைய ஊழியா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் வட்டம், பாலூா் கிராமம், டாக்டா் அம்பேத்கா் நகரைச் சோ்... மேலும் பார்க்க