அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பழகுநா் பயிற்சி பெறலாம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமதுநாசா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மற்றும் தொழிற்பழகுநா் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா்.
இப்பயிற்சியில் சேர விரும்புவோா் பொறியியல் பட்டம், பட்டயப் படிப்பு (இயந்திரவியல் / தானியியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட படிப்புகள் படித்தவராகவும், 2021 முதல் 2025ஆம் ஆண்டு வரை தோ்ச்சி பெற்றவா்களாகவும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபா்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநருக்கான தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பங்கள், ட்ற்ற்ல்ள்://ய்ஹற்ள்.ங்க்ன்ஸ்ரீஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வழியாகவே வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி- அக். 18.