தமிழ் சினிமாவில் Middle aged மனிதர்களோட கதைகள் வரதேயில்ல! - Thambi Ramaiah | Uma...
அரசு ஊழியரின் சொத்துகள் தனிப்பட்டது அல்ல - உயர் நீதிமன்றம்
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பேராசிரியர் தொடர்பான வழக்கில் அரசு ஊழியரின் சொத்துகள், கடன்கள் குறித்த விவரங்கள் தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நீர்வள துறை உதவிப் பொறியாரின் சொத்து விவரங்களை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
அதில், மனுவை மீண்டும் பரிசீலித்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க மாநில தகவல் ஆணையத்துக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களை வழங்க மறுத்த உத்தரவை எதிர்த்து சீனிவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.