செய்திகள் :

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

post image

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளதாக சட்டப் பேரவையில் அரசு தெரிவித்துள்ளது.

இதற்கென சட்ட வரைவில் உள்ள வகைமை- I , வகைமை- II உடன் வருமான வரம்புகளைக் கருத்தில் கொள்ளாமல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரைக் குறிப்பிடும் வகையில் வகைமை- II (பி) புதிதாக சேர்க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதன்படி, பட்டியலின பிரிவுகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று ரூ.1 கோடி வரையிலான அரசாங்க ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவுள்ளது.

இதையும் படிக்க | ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். இதுகுறித்து மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா பேசுகையில், "அமைச்சரவையில் இதை அவர்கள் பரிசீலிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். பாஜக இந்த நடவடிக்கையை எதிர்க்கும். இது முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல். காங்கிரஸுக்கு, சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமே. மற்றவர்களை அவர்கள் கணக்கில் எடுப்பதில்லை" என்று கூறினார்.

பாஜகவின் எதிர்ப்புக்கு பதிலளிக்கும் விதமாகாப் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், “கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் பௌத்தர்கள் போன்ற சமூக ரீதியாக அதிகாரம் இழந்த சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதில் என்ன தவறு? எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. அது திருப்திப்படுத்துவது இல்லையா? பாஜகவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு தவறாகவே கருதப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் 7 மாவட்டங்களில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் சோதனை!

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்தல், ஊழலில் ஈடுபடுவது குறித்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து கர்நாடக லோக்ஆயுக்தா ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகளுக்குச் சொந்தமாக இடங்களில் சோதனை நடத்தி வருகின்றத... மேலும் பார்க்க

தெலங்கானா விபத்து: மீட்புப் பணியில் கேரள 'கடாவர்' நாய்கள்!

காணாமல் போன மனிதர்கள், சடலங்களை கண்டறிவதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற கேரளத்தைச் சேர்ந்த மோப்ப நாய்கள் தெலங்கானா சுரங்க விபத்து பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளன. தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட... மேலும் பார்க்க

மூன்று அல்ல பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கல்விக் கொள்கைக்... மேலும் பார்க்க

பிரிட்டனில் அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி!

பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.மேலும், இந்திய தேசியக் கொடியை அமைச்சர் முன்னிலையில் கிழித்ததால... மேலும் பார்க்க

இந்திய தொழில்நுட்ப மறுமலா்ச்சி வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் -அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

அஸ்வினி வைஷ்ணவ்- மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, ரயில்வே, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா்மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில், சிறு விவசாயி ஒருவா் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூ... மேலும் பார்க்க

டிஜிட்டல் முறைகள் மூலம் நிா்வாகிகள் திறன் மேம்பாடு: தோ்தல் ஆணையம்

தோ்தல் துறை நிா்வாகிகளின் திறனை மேம்படுத்த டிஜிட்டல் முறைகள் பயன்படுத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. புது தில்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை தோ்தல் அதிகாரிகளின் ... மேலும் பார்க்க