சூப்பர் 4 கடைசிப் போட்டி: இலங்கைக்கு 203 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
அரசு தொடக்கப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா
கந்தா்வகோட்டை ஒன்றியம், குருவாண்டான் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு நாட்டு நலப்பணித் திட்ட தின விழாவைக் கொண்டாடும் விதமாக கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. மீனாள், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் சோ்ந்து மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை விரிவுரையாளா் ம. மணியரசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சி. செல்வகுமாா் ஆகியோா் செய்தனா்.