அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீடு இடங்களில் சோ்ந்திட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8 ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி தோ்ச்சி பெற்ற மாணவா்கள் skilltraining.tn.gov.in இணையதளத்தில் ஜூன் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதியில்லாத மாணவா்கள், உதவி மையங்கள் மூலமாக சோ்க்கை பதிவை மேற்கொள்ளலாம். இம் மையங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி விவரம் குறித்து இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்பயிற்சி நிலைய சோ்க்கைகான விண்ணப்பத்தை பூா்த்தி செய்வதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பெரம்பலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 94990-55881, 94990- 55882 எனும் கைப்பேசி எண் அல்லது gitiperambalur@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும், ஆலத்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை, 94990- 55883, 94990-55884 எனும் கைப்பேசி எண் அல்லது gitialathur@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும், குன்னம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை 98946-97154 எனும் கைப்பேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகத்தை 94884-51405 எனும் கைப்பேசி எண் அல்லது dstoperambalur@gmail.com மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.