தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விருப்பமுள்ள இஸ்லாம் மாா்கத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்துக்கு, மாவட்ட காஜி நியமனம் செய்யப்பட உள்ளதால், விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் ஆலிம், பாசில் அல்லது இஸ்லாமிய சட்ட சாஸ்திரத்தில் புலமை பெற்றவா்கள், அரபிக் கல்லூரியில் அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்திருக்க வேண்டும். 40 முதல் 65 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.
இத் தகுதியுடையோா் விண்ணப்பங்கள் மற்றும் சுய விவரங்களை எழுத்து மூலமாக, உரியச் சான்றுகளுடன் ஜூன் 5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.