`நாகரீகமற்றவர்களா?' தமிழச்சி vs தர்மேந்திர பிரதான் vs கனிமொழி - மக்களவையில் நடந்...
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.
நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள் மற்றும் செயல்திறனை ஆராய்ந்து, அதை பொதுவான கட்டமைப்பின்கீழ் கொண்டு வரும் வகையில் அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ஏஎஸ்ஆா்டியு) ஏற்படுத்தப்பட்டது.
இக்கூட்டமைப்பில் உறுப்பினா்களாக 70 மாநில போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. இக்கூட்டமைப்பு சாா்பில் சிறந்த சேவையாற்றிய கழகங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், 2023-2024-ஆம் ஆண்டுக்கான விருதுகளில் 19 விருதுகள் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநா் கிரண்பேடியிடமிருந்து தமிழக போக்குவரத்துக் கழக தலைமை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா்.