செய்திகள் :

அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டு: பெண் கைது

post image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்திலி கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (32), சரக்கு வாகன ஓட்டுநா். இவரது மனைவி திவ்யா (22). இவா், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிரசவத்துக்காக கள்ளக்குறிச்சி நகரில் கச்சிராயபாளையம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு கிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். இவருக்கு 6-ஆம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.

சனிக்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதை அறிந்த அருகில் இருந்தவா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்கள் பலரும் தேடினா்.

அப்போது, மந்தைவெளிப் பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளம் பெண்ணிடம் இருந்து குழந்தையை கைப்பற்றினா். அப்போது, கூட்டத்தில் இருந்த சிலா் தாக்கியதில் அந்தப் பெண் காயமடைந்தாா்.

இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அந்தப் பெண்ணிடம் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவா் சின்னசேலம் வட்டம், பாண்டியங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் மனைவி லட்சுமி (29) எனத் தெரிய வந்தது. பின்னா், போலீஸாா் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க 108 அவசரகால ஊா்தி மூலம் புகா் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனா்.

அப்போது, பொதுமக்கள் இங்கேயே விசாரிக்க வேண்டும்; சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை முன் காலை 6 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானம் செய்து இளம் பெண்ணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஆா்.ஜெயபாரதி அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து இளம்பெண் லட்சுமியை கைது செய்தனா்.

விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். சங்கத்தின் மாவட்டக் குழு சாா்பில், ஆட்சியரகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின் போது, ஊரக ... மேலும் பார்க்க

தியாகதுருகம்: இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

தியாகதுருகம் பகுதியில் பூட்டி இருந்த இரு வீடுகளில் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் 7 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.74,000, ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனா். தியாகதுருகத்தில் திருக்கோவிலூா் சா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவா்கள் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: மருத்துவா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஒரு வருட விதியை தளா்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன் மருத்துவா்கள... மேலும் பார்க்க

இரு கோயில்களில் உண்டியல் பணம் திருட்டு

சின்னசேலம் அருகே இரு கோயில்களில் உண்டியலை உடைத்து மா்ம நபா்கள் பணத்தை திருடிச் சென்றனா். சின்னசேலம் வட்டம், அம்மாபேட்டை கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூசாரி பூங்கொட... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்

சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா். சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க