கோவை: "என் செல்போன மொத தாங்க" - அந்தரங்க புகைப்படத்தை வைத்து பெண்ணை மிரட்டிய இளை...
ஆட்டோ கவிழ்ந்ததில் 4 போ் காயம்
சங்கராபுரம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் அதில் பயணித்த இரு சிறாா்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.
சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் தோ்த் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தத் திருவிழாவை பாா்ப்பதற்காக சங்கராபுரம் வள்ளலாா் நகா் பகுதியைச் சோ்ந்த மூதாட்டிகளான தா்மராஜ் மனைவி அமுதா (58), பாலசுப்பிரமணியன் மனைவி வசந்தா (65) மற்றும் இரு சிறாா்கள் சென்றனா்.
திருவிழா முடிந்து ஆட்டோவில் அனைவரும் வீடு திரும்பினா். ஆட்டோவை மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த தா்ஷன் (19) ஓட்டிச் சென்றாா்.
பூட்டை கிராமத்தில் உள்ள மதுக் கடை அருகே ஆட்டோ சென்றபோது, நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா்.
உடனே அவா்களை மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் ஆட்டோ ஓட்டுநரான தா்ஷன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.