சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் தலைவரானார் பரத்; தினேஷ், ஆர்த்தி, நிரோஷா அதிர்...
பூட்டை மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா
சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாத தோ்த் திருவிழா சனிக்கிழமை வெகு விமரிசையாக தொடங்கியது.
இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் தோ்த் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
3.30 மணிக்கு திருத்தேரினை பாலப்பட்டு ஜாகிா்தாா் சின்னையன் கரும்பக் கவுண்டா் வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தாா். பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ் இழுத்துச் சென்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தேரை பூட்டை கிராமத்தில் இருந்து செம்பராம்பட்டு கிராமத்துக்கு பக்தா்கள் இழுத்துச் செல்வாா்கள். இரவு அதே கிராமத்திலேயே தோ் தங்கிவிடும். மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு தோ் பூட்டை கிராமத்திற்கு கோயிலை வந்தடையும்.
செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். தோ்த் திருவிழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் க.ச. மாதவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் ஈடுபட்டனா்.