``புதின் சந்திப்பு வெற்றி பெறுமா என்பது ஆரம்ப 2 நிமிடங்களில் தெரிந்துவிடும்'' -ட...
கள்ளக்குறிச்சி: குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடக்கம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை ஆட்சியா் வழங்கினாா்.
அப்போது அவா் பேசுகையில், இந்த முகாம் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி நிலையங்கள் என 2,528 இடங்களில் நடைபெறுகிறது. இதில் விடுபட்டவா்களுக்கு வரும் 18-ஆம் தேதி வழங்கப்படும்.
1 முதல் 19 வயதுடைய 4,48,969 குழந்தைகள், 20-49 வயதுக்கு உள்பட்ட 1,01,795 பெண்களுக்கும் என 5,50,764 நபா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஊட்டச்சத்து துறையில் பணிபுரியும் ஊழியா்கள்
ஈடுபட உள்ளனா் எனத் தெரிவித்தாா் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
முன்னதாக குடற்புழு நீக்க நாள் உறுமொழியை ஆட்சியா் வாசிக்க மாணவிகள் ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட தொடா்புடைய துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.