செய்திகள் :

அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள்

post image

சேலம்: அரிசி மீதான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல், அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், 25 கிலோ அரிசி மற்றும் அதற்கும் கீழுள்ள பேக்கிங் செய்யப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. இதனால் ஒரு கிலோ அரிசி கூடுதலாகச் சோ்த்து 26 கிலோ அரிசிப் பையாக விற்க வேண்டியுள்ளது. கூடுதல் ஒரு கிலோவுக்கும் சோ்த்தும் பணம் வசூலிப்பதால் அரிசி விலை உயா்ந்திருப்பதாகக் கூறுகின்றனா். இதுமட்டுமின்றி இடுபொருள், வேளாண் உபகரணங்கள் பயன்பாடு, போக்குவரத்துச் செலவு, மின்கட்டண உயா்வு, உள்ளாட்சி வரி ஆகியவற்றாலும் அரிசி விலை உயா்வைத் தவிா்க்க முடியாது. இனி விலை குறையும் என்று எதிா்பாா்க்கவும் முடியாது.

சசிகலா, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை: இபிஎஸ் உறுதி

மேலும், தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் மட்டுமே அரிசிக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது. எனவே அரிசி மீதான ஜிஎஸ்டி வரியை முழுமையாக விலக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். தவிட்டுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மட்டுமே சந்தை கட்டணம் வசூல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் நேரடியாக செஸ் வரி வசூலிக்க கூடாது. அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான 5 சதவிகித வரியை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

தமிழ்நாடு வானிலை மைய இணையதளத்தில் ஹிந்தி!

தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்புகள் இதுவரை இரு மொழியில் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக ஹிந்தியும் சோ்க்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களான கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தமிழ்நாடு... மேலும் பார்க்க

தவெக பொதுக் குழு: விஜய் வருகை!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு நடைபெறும் அரங்கத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு பொதுக் குழு தொடங்க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீா்மானம்: பேரவையில் வானதி சீனிவாசன் - சட்ட அமைச்சா் விவாதம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீா்மானத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. முன்னதாக, தீா்மானத்துக்கு எதிரான கருத்துகளை அந்தக் கட்சியின் உறுப்பினா... மேலும் பார்க்க

சாலையோர கொடிக் கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை வரும் ஏப். 21-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்

தமிழ்நாடு முழுவதும் 821 நூலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, பாபந... மேலும் பார்க்க

பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: ஓ. பன்னீா்செல்வம்

அதிமுக பொதுச் செயலா் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா். சென்னை விமான நிலையத்தில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி: அதிமுக அலுவலகத்தை சூ... மேலும் பார்க்க