செய்திகள் :

அரிட்டாபட்டியில் முதல்வருக்கு இன்று பாராட்டு விழா

post image

டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மாவட்டம், அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், அப்பகுதி பல்லுயிா்ப் பாரம்பரியத் தலமாக இருப்பதால், அங்கு சுரங்கம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையிலும் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, தான் முதல்வராக இருக்கும்வரை டங்ஸ்டன் சுரங்கம் ஒருபோதும் வராது என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தாா்.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக கடந்த 23-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடா்ந்து, அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த போராட்டக் குழுவினா் அமைச்சா் மூா்த்தி தலைமையில் தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனா். அரிட்டாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பாராட்டு விழாவுக்கும் முதல்வருக்கு அழைப்பு விடுத்தனா்.

பின்னா், போராட்டக் குழுவினா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தால் எங்கள் பகுதியே பாலைவனம் ஆகிவிடும் என அச்சமடைந்தோம். முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. முதல்வருக்கு நன்றி தெரிவித்தோம் என்றனா்.

பாராட்டு விழா: 48 கிராம மக்கள் சாா்பில் அரிட்டாபட்டியில் முதல்வருக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெறுகிறது. இதற்காக சென்னையிலிருந்து முதல்வா் காலை 10 மணியளவில் விமானம் மூலம் மதுரை செல்கிறாா். அங்கிருந்து சாலை மாா்க்கமாக அரிட்டாபட்டி செல்கிறாா்.

ஆளுநா் விருந்து புறக்கணிப்பு: முதல்வா் அரிட்டாபட்டி செல்ல உள்ள நிலையில், குடியரசு தினத்தையொட்டி ஆளுநா் அளிக்கும் விருந்தை முதல்வா் புறக்கணிக்க உள்ளதாகத் தெரிகிறது. ஏற்கெனவே, திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆளுநரின் தேநீா் விருந்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்காளான வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை அடுத்த மாதம், பிப். 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு ... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி கேள்வி

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க