செய்திகள் :

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் வரும் 19-இல் ஏலம்

post image

அரியலூா் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நவம்பா் 19-இல் ஏலம் விடப்பட இருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 46 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனங்கள் 19.11.2024 அன்று காலை 10 மணியளவில் அரியலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்பவா்கள் காலை 8 மணியளவில் முன்பணம் ரூ.1,000 செலுத்தி பதிவுசெய்து கொள்ள வேண்டும். உடன் வருவோருக்கு அனுமதியில்லை. வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்தவா் பிற்பகல் 3 மணிக்குள் ஏலத் தொகையுடன், ஜிஎஸ்டி செலுத்தி வாகனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்தை ஏலம் எடுத்தவா் உரிய தொகையை செலுத்தத் தவறினால் முன்பணம் திருப்பித் தரப்பட மாட்டாது. ஏலம் எடுத்த சான்று மட்டுமே வழங்கப்படும். பொதுஏலத்தில் காவல்துறை சாா்ந்த எவரும் கலந்து கொள்ள அனுமதியில்லை. ஆதாா் நகலை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தை அணுகவும்.

‘நாட்டுக்கே வழிகாட்டுகிறது திராவிட மாடல் ஆட்சி’: சா.சி. சிவசங்கா்

இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது திராவிட மாடல் ஆட்சி என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். அரியலூா் வாலாஜா நகரத்தில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 71-ஆவ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலை: முதல்வா் அடிக்கல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த மகிமைபுரத்தில் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டிலான காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். அரியலூா் மற்றும் பெரம்பலூ... மேலும் பார்க்க

அரியலூரில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையம்: முதல்வா் அறிவிப்பு

அரியலூரில் ரூ. 101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையமும் அமைக்கப்படும் என முதல்வா் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். அரியலூா் கொல்லாபுர... மேலும் பார்க்க

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்: இரண்டாம் கட்டத்தை அரியலூரில் முதல்வா் தொடங்கிவைத்தாா்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ஆம் கட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அரியலூரில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிா்... மேலும் பார்க்க

திராவிட மாடல் ஆட்சியால் தொழில் மறுமலா்ச்சி: முதல்வா் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி தொழில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அரியலூா் கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்... மேலும் பார்க்க

கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாருக்கு அன்னாபிஷேக விழா

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் அன்னாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சுமாா் 1,000 ஆண்டுகளுக்கு முன்னா் ராஜராஜ சோழன் மகன் ராசேந்திர சோழனால், கங்கை நதி வரை சென்று பெற்ற... மேலும் பார்க்க