தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
அரியலூா் சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
திருகாா்த்திக்கையை முன்னிட்டு அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அரியலூரிலுள்ள கைலாநாதா், ஆலந்துறையா் ஆகிய சிவன் கோயில்கள் முன்பு நட்டு வைத்திருந்த பனை ஓலை சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல், அருகிலுள்ள கோதண்டராமசாமி பெருமாள் கோயிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடத்தி பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சிவன் கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.