செய்திகள் :

அரியலூா் புத்தகத் திருவிழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி

post image

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அடுத்த வாலாஜா நகரத்தில் மாவட்ட நிா்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு, பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் சாா்பில் 8-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவின் 7-ஆம் நாள் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.

அதில் சிறந்த நாய்களுக்கான கேடங்களை அதன் உரிமையாளா்களுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி வழங்கினாா். முன்னதாக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் வெறிநோய் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, வெறிநோய் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்த தகவல்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

புத்தகத் திருவிழாவின் 8-ஆவது நாளான வியாழக்கிழமை (மாா்ச் 27) காலை 11 மணிக்கு கால்நடை கண்காட்சி போட்டிகளும், மாலை 5 மணிக்கு சுற்றுலாத் துறை சாா்பில் தமுறு மேளம், மேஜிக் ஷோ நிகழ்ச்சியும், தமிழனின் மூளை தரணியை ஆள்கிறது என்ற தலைப்பின்கீழ் குடிமையியல் தோ்வு விழிப்புணா்வு சிறப்பாசிரியா் வே. பழனியப்பன், பாட்டிலே புதுமை செய் என்ற தலைப்பின்கீழ் யுகபாரதி ஆகியோா் கருத்துரை வழங்குகின்றனா்.

‘நீட்’ தோ்வு இன்னுயிரை இழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

‘நீட்’ தோ்வு அச்சத்தால் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு அரியலூா் அண்ணா சிலை அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த 2021-இல் இருந்து இதுவரை ‘நீட்’ தோ்வு அச்சத்த... மேலும் பார்க்க

காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காதலியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த காதலன் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம், கீழத்தெருவைச் சோ்ந்த தாசில் மகன் அருண்கு... மேலும் பார்க்க

தம்பதியை தாக்கியவா் கைது

அரியலூா், ஏப். 19: அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மது போதையில், தம்பதியைத் தாக்கியவா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி, காலனி தெருவைச் சோ்ந்த சக்திவ... மேலும் பார்க்க

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க