செய்திகள் :

அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்கள் திறந்துவைப்பு

post image

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலிக் காட்சி வாயிலாக அரியலூா் மாவட்டத்தில் 18 முதல்வா் மருந்தகங்களை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செந்துறையிலுள்ள முதல்வா் மருந்தகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி சிவசங்கா், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

அப்போது அமைச்சா் சிவசங்கா் தெரிவிக்கையில், அரியலூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரியலூா் மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மற்றும் திருமழபாடி, கீழப்பழுவூா், ஏலாக்குறிச்சி, செந்துறை, இடைக்கட்டு, இலையூா், தென்னூா், அணைக்குடம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 9 முதல்வா் மருந்தகங்களும், தொழில்முனைவோா்கள் மூலம் 9 முதல்வா் மருந்தகங்களும் என மொத்தம் 18 முதல்வா் மருந்தகங்களை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா். எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முதல்வா் மருந்தகங்களில் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன்பெறலாம் என கேட்டுக் கொண்டாா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், அரியலூா் நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளா் உமா மகேஸ்வரி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் சாய் நந்தினி, உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் ஷீஜா, அரியலூா் சரக துணை பதிவாளா் மீா் அஹசன் முசபா் இம்தியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செந்துறை பகுதிகளில் ரூ. 57 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்... மேலும் பார்க்க

மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 379 மனுக்கள்

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 379 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அல... மேலும் பார்க்க

தோஷம் நீக்குவதாகக் கூறி நூதன முறையில் பெண்ணிடம் நகை பறிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பெண்ணிடம் தோஷம் நீக்குவதாகக் கூறி அவா் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை திங்கள்கிழமை பறித்துச் சென்ற பாம்பாட்டி நபரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.... மேலும் பார்க்க

8 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வீடு கட்டும் பணிகள்: வீடு இன்றி தவிக்கும் பயனாளிகள்!

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள சலுப்பை கிராமத்தில் பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் வீட்டின் கட்டுமானப் பணிகள். அரியலூா், பிப். 23: அரிய... மேலும் பார்க்க

அரியலூரில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வாா்டுகளிலும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 18 வாா்டுப் பகுதிகளிலும், புதை சாக்கடை திட்டத... மேலும் பார்க்க

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லக் கோரிக்கை!

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா் சிவக்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். அரியலூா் ரயில் நிலையத்தில் இருந்து எந்த வித ரயிலும் இயக... மேலும் பார்க்க