செய்திகள் :

அரியவகை நோய் பாதிக்கப்பட்ட 19 வயது டிக்-டாக் பிரபலம் மரணம்!

post image

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் அரியவகை நோய் தாக்கி மரணமடைந்தார்.

19 வயதான டிக்-டாக் பிரபலமான பியென்றி பூய்சென் மிகவும் அரிதான ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் புரோஜீரியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் புதன்கிழமை மரணமடைந்ததாக அவரது தாயார் பி.பூய்சென் முகநூல் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ தென்னாப்பிரிக்காவின் பிரபலமான, அனைவருக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய இளம்பெண்களில் ஒருவரான பியென்றி காலமானதை ஆழந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

‘பா(Paa)’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன்

பியென்ரி உத்வேகமான பெண் மட்டுமல்ல, புரோஜீரியா நோயால் பாதிக்கப்பட்ட கடைசி பெண்ணாக பார்க்கப்பட்டார். இந்த அரிவகை நோயால் பாதிக்கப்பட்டது போன்று ஹிந்தி திரைப்படமான ‘பா(Paa)’ திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார்.

டிக்-டாக்கில் பிரபலமான பியென்ரி மொத்தமாக 2,69,200 ஃபாலோவர்களை கொண்டிருந்தார். அவரது இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, இதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டிருந்தார். அவரின் மரணம் டிக்-டாக் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புரோஜீரியா நோயின் அறிகுறி என்ன?

புரோஜீரியாவால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் பிறக்கும் போதும் சாதாரணமாக இருந்தாலும், அவர்களில் மூளையை பாதித்து எளிதில் உடையக்கூடிய எலும்புகள், இருதய நோய்கள், விரைவான முதுமை, தோல் சுருக்கம், முடி உதிர்தல், மூட்டு விறைப்பு வளர்ச்சி, குறைந்த உயரம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது

நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் புறக்கணிப்பு: முடங்கும் அபாயத்தில் அமெரிக்க அரசுத் துறைகள்

அமெரிக்க அரசின் பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக அந்த நாட்டு நாடாளுமன்ற கீழவையில் கொண்டு வரப்பட்ட மசோதாக்கள் புறக்கணிக்கப்பட்டதால் அந்தத் துறைகள் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

குரோஷியா பள்ளியில் கத்திக்குத்து: சிறுமி உயிரிழப்பு

தென்மத்திய ஐரோப்பிய நாடான குரோஷியாவிலுள்ள பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் சிறுமி உயிரிழந்தாா். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் ஸாக்ரெபில் உள்ள ஆரம்ப நில... மேலும் பார்க்க

லூயிஜி மஞ்ஜானியை கொலையாளியாக்கிய ஸ்போண்டிலோசிஸ் என்ற கீல்வாதம்

ஒரு அங்குல இடைவெளி பெரிதாக என்ன செய்துவிடக்கூடும். ஆனால், லூயிஜி முதுகெலும்பில் இருக்கும் 33 எலும்புகளும் இருக்க வேண்டிய சரியான அளவில் இல்லாமல் அரை அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிக்குள் வந்ததால், அவர... மேலும் பார்க்க

குரோஷியா: பள்ளிக்குள் கண்ணில் பட்ட அனைவருக்கும் கத்திக்குத்து! இளைஞர் கைது!

குரோஷியா நாட்டில் ஒரு பள்ளிக்குள் நுழைந்து, கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.குரோஷியா நாட்டின் தலைநகரான ஸாக்ரெப்பில் இயங்கி வரும் பள்ளிக்குள், வெள்ளிக்கிழமை (டிச. 2... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: கைதான லூயிஜி மஞ்ஜானி யார்?

அமெரிக்காவில் யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் தாம்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் லூயிஜி மஞ்ஜானி மீது கொலை, பின்தொடர்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்... மேலும் பார்க்க

காப்பீட்டு நிறுவன நிர்வாகி கொலை: தலைதூக்கும் 3டி-பிரிண்டட் துப்பாக்கி! அப்படி என்றால்?

அமெரிக்காவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுனைடெட் ஹெல்த்கேரின் தலைமை செயல் நிர்வாகி பிரையன் தாம்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், 3டி-பிரிண்டட் துப்பாக்கிப் பயன்படுத்தப்பட்டி... மேலும் பார்க்க