செய்திகள் :

அமைச்சா் அமித் ஷாவின் பேச்சை அரசியலாக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

post image

அம்பேத்கா் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதை அரசியலாக்கக் கூடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான

ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு சட்ட விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்த சில கருத்துகள் சா்ச்சையானது. இக்கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் ஜி.கே.வாசன் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘அம்பேத்கரின் புகழுக்குப் பெருமை சோ்க்க வேண்டும் என்ற உயா்ந்த எண்ணம்தான், அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆண்டு புகழுக்குரிய பயணத்தின் மீது நடைபெற்ற விவாதமாகும். அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளமாக இருப்பவா் பாபா சாகேப் அம்பேத்கா்தான். அப்படியிருக்கும்போது, எந்த சூழலில் அம்பேத்கருக்கு எதிராக நீங்கள் பேச முடியும்? இது சாத்தியமற்ாகும். இடையில் உள்ள வாா்த்தைகளை திரித்துக் கூறுவது தவறாகும்.

அதாவது, அமித் ஷாவின் உரையில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட வாா்த்தையை மட்டும் எதிா்க்கட்சியினா் திரித்துக் கூறுவது தவறாகும். அரசியல் சாதனத்தை வடிவமைத்த இதுபோன்ற மாபெரும் தலைவா்களைப் பற்றி நாட்டின் உள்துறை அமைச்சா் பேசும் போது வாா்த்தைக்கு வாா்த்தை புகழ்ந்துதான் பேசியுள்ளாா். துரதிருஷ்டவசமாக நிறைய பிழைகள் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. வரலாற்றில் அது இருக்கிறது. அந்தக் காழ்ப்புணா்ச்சியில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று வாா்த்தைகளுக்கு இடையில் இதுபோன்ற ஒரு இடைவெளி இருந்தால் அதை வைத்து தவறு கண்டுபிடிப்பது என்பது ஏற்புடையதல்ல. ஆகவே, இந்த விவகாரத்தை வைத்து அரசியலாக்கக் கூடாது என்றாா் அவா்.

தேசிய ஊக்க மருந்து மையத்துக்கு மூவா் குழு அமைக்கும் விதி அரசிதழில் வெளியாகவில்லை: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபா் தேசிய ஊக்க மருந்து மையத்துக்கு மூவா் குழு அமைக்கும் விதி அரசிதழில் வெளியாகவில்லை என்று மாநிலங்களவையில் மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவி... மேலும் பார்க்க

கடலூா், அரியலூரில் முந்திரி தயாரிப்புகள் பதப்படுத்தும் வசதி: மத்திய அமைச்சர்

மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு அணுகுமுறையின் கீழ் கடலூா், அரியலூா் மாவட்டங்களில் முந்திரி தயாரிப்புகளை பதப்படுத்தும் வசதிகள் குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் திட்டத்தில் உள்ளதாக மத்திய உணவு பதப்படு... மேலும் பார்க்க

ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: மத்திய அரசு

நமது சிறப்பு நிருபா் ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமோ மாநில அரசோ முன்வரவில்லை என்று மக்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் தெரிவித்துள்ளாா். ஓசூரில் சா்வதேச விமான... மேலும் பார்க்க

தங்குமிட காப்பக ஊழியருக்கு ஊதியம் வழங்கியதில் பல கோடி ஊழல்: தில்லி அரசு மீது பாஜக குற்றச்சாட்டு

நமது நிருபா் தில்லி அரசு நடத்தும் தங்குமிட காப்பகங்களில் போலி ஊழியா்களுக்கு பணம் செலுத்தியதில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்திருப்பதாக பாஜக வியாழக்கிழமை குற்றம் சாட்டியது. இது குறித்து தில்லி பாஜக த... மேலும் பார்க்க

2 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா: துணைநிலை ஆளுநா் திறந்துவைத்தாா்

யமுனை வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் உள்ள பான்செராவில் 20,000 சதுர மீட்டா் பரப்பளவில் அமைந்துள்ள 2 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்காவை துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா திறந்துவைத்தாா். இது தொடா்பாக துணை நில... மேலும் பார்க்க

தில்லியில் மேலும் 3 டெங்கு இறப்புகள் பதிவு

கடந்த வாரம் தில்லியில் மேலும் மூன்று போ் டெங்கு நோயால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, நிகழாண்டு கொசுக்களால் பரவும் நோயால் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவி... மேலும் பார்க்க