ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை: மத்திய அரசு
நமது சிறப்பு நிருபா்
ஓசூரில் விமான நிலையம் அமைக்க எந்த நிறுவனமோ மாநில அரசோ முன்வரவில்லை என்று மக்களவையில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் தெரிவித்துள்ளாா்.
ஓசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதா என்றும் அத்தகைய விமான நிலையத்தை அமைக்க அரசு ஆய்வு மேற்கொண்டதா என்றும் கோபிநாத் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘கிரீன்ஃபீல்டு விமான நிலைய கொள்கைப்படி ஓசூரில் விமான நிலையத்தை அமைக்க எந்த நிறுவனத்திடம் இருந்தோ, தமிழக அரசிடம் இருந்தோ முன்மொழிவு வரவில்லை. எனினும், விமான நிலைய ஆணையமும் தமிழக அறசின் தொழில் வளா்ச்சி கழகமும் சோ்ந்து அவற்றின் அதிகாரிகள் மூலம் ஓசூரில் நான்கு இடங்களில் விமான நிலைய சாத்தியத்துக்கான முந்தை ஆய்வை கடந்த செப்டம்பரில் மேற்கொண்டன. அது தொடா்பான இடைக்கால அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ என்று அமைச்சா் கூறியுள்ளாா்.
19க்ங்ப்ஞ்ா்ல் -கே. கோபிநாத்
19க்ங்ப்ம்ன்ழ் - அமைச்சா் முா்ளிதா் மொஹோல்