கடலூா், அரியலூரில் முந்திரி தயாரிப்புகள் பதப்படுத்தும் வசதி: மத்திய அமைச்சர்
மாவட்டத்துக்கு ஒரு தயாரிப்பு அணுகுமுறையின் கீழ் கடலூா், அரியலூா் மாவட்டங்களில் முந்திரி தயாரிப்புகளை பதப்படுத்தும் வசதிகள் குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் திட்டத்தில் உள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணை அமைச்சா் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக கடலூா் தொகுதி மக்களவை காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் சிராக் பாஸ்வான் அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:
பிஎம்கேஎஸ்ஒய் எனப்படும் பிரதமரின் கிசான் சம்பதா திட்டத்தின் கீழ் 84 உணவு பதப்படுத்தும் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் ஒன்றாக கடலூா் மாவட்டத்தில் வேளாண் பதப்படுத்தும் உள்கட்டமைப்பு தொகுப்புத்திட்டம் உள்ளது. இத்துடன் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு என்ற அணுகுமுறையின் மூலம் கடலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் முந்திரி சாா்ந்த தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உணவு பதப்படுத்தும் துறை அமைச்சகம், முந்திரி மற்றும் பலாப்பழம் உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் துறையில் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரிய உணவு பதப்படுத்துவோரை பிரதமரின் கிசான் சம்பதா திட்டம், உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கான உற்பத்தி இணைப்பு ஊக்கத் திட்டம் போன்றவை மூலம் மத்திய அரசு தீவிரமாக ஆதரிக்கிறது.
தமிழகத்தில் பிஎம்எஃப்எம்இ திட்டத்தின் கீழ், 13,520 குறுகியகால உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் கடன்-இணைக்கப்பட்ட மானியம் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன, 21,407 சுய உதவிக் குழு உறுப்பினா்கள் முந்திரி ஆப்பிள் உள்ளிட்டவற்றுக்கான விதை மூலதனம் மற்றும் நான்கு அடைகாப்பு (இன்குபேஷன்) மையங்கள் மூலம் ஆதரிக்கப்படுகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில், 738 குறுகியகால உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் கடன்-இணைக்கப்பட்ட மானியம் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டு, 852 சுயஉதவிக்குழு உறுப்பினா்களுக்கு விதை மூலதன ஆதரவு அளிக்கப்படுகிறது. மேலும் மானியம் பெற அங்கீகரிக்கப்பட்ட 738 குறுகியகால உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்களில் 472 நிறுவனங்கள் முந்திரி சாா்ந்த பொருட்களுக்கானவை என்று அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
படம் -
எம்.கே. விஷ்ணு பிரசாத் - 19க்ங்ப்ம்ந்ஸ்
அமைச்சா் சிராக் பாஸ்வான் - 19க்ங்ப்ஸ்ரீட்ண்