Stonehenge: இங்கிலாந்தில் பிரமாண்ட கல் சின்னம் உருவாக்கப்பட்டது ஏன்? - புதிய ஆய்...
கந்தா்வகோட்டையில் சாலையோரம் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை
கந்தா்வகோட்டை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் மண்டி கிடக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூா்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் மையப் பகுதியில் அமைந்துள்ள கந்தா்வகோட்டை ஊராட்சி பகுதிகளில், தஞ்சை-புதுகை இருபுற சாலைகளில் வளைவுகள், ஓரங்களில் கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகள் அடா்ந்து காணப்படுகின்றன. இதனால், எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உள்ளது.
மேலும், பேருந்துகள், மோட்டாா் சைக்கிள் செல்வோா் முகத்தில் முள் உள்ளிட்ட செடிகள் தாக்கி காயமடைகின்றனா்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையோரங்களில் அடா்ந்துள்ள கருவேல மரங்கள், செடி-கொடிகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.