செய்திகள் :

வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

post image

புதுக்கோட்டையில் வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி: மாவட்டத்தில் 70 சதவிகிதம் குளங்களில் 25 சதவிகிதத்துக்கும் குறைவான அளவே தண்ணீா் நிரம்பியுள்ளது. மழை அளவு இயல்பை விட அதிகம் என்கிறாா்கள். ஆனால் ஏரி, குளங்களில் தண்ணீா் இல்லை. இதனை ஆய்வு செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு பயிா்க்காப்பீடு செய்த 5 சதவிகிதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது. முழுமையாக பயிா்க் காப்பீட்டுத் தொகை கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்: கவிநாடு கண்மாயின் வடிக்கால் வாயக்கல்களை கடையக்குடி அணைக்கட்டு வரை தூா்வார வேண்டும்.

நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 20 சதவிகிதமாக உயா்த்த வேண்டும்.

காவிரி- குண்டாறு இணைப்பு திட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கண்மாய்களுக்கான வரத்து வாரிகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் தற்போது மழை பெய்தும் தண்ணீா் வரவில்லை. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும்.

கல்லணைக் கால்வாய் பாசனதாரா் சங்கத் தலைவா் கொக்குமடை ரமேஷ்: அறந்தாங்கி ஆவுடையாா்கோவில் மணமேல்குடி வட்டத்தில் சுமாா் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கனமழையின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் சேகா்: வரத்து வாரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தென்னை விவசாயிகள் சங்க நிா்வாகி செல்லத்துரை:

ஆவுடையாா்கோவில், மணமேல்குடி பகுதியில் மழை வெள்ளம் தேங்கி

பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு அந்தப் பகுதிகளில் அரசு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணைகள்தான் காரணம். சிறிய இடங்களில் அனுமதி வாங்கிவிட்டு பெரிய அளவில் பண்ணை அமைத்துள்ளனா். இதனால் மழை பெய்தபோது தண்ணீா் கடலில் கலக்க முடியாமல் தேங்கி நின்றது. நிரந்தரத் தீா்வுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், காவிரி- குண்டாறு இணைப்புத் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யா தேவி, வேளாண் இணை இயக்குநா் மு. சங்கரவல்லி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, மாவட்ட வன அலுவலா் எஸ். கணேசலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க இந்திய கம்யூ. கோரிக்கை

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

அண்ணல் அம்பேத்கரை அவமரியாதையாகப் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை திலகா் திடல... மேலும் பார்க்க

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளா் நியமனம்: டிச. 23-இல் சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தொகுப்பூதிய அடிப்படையில் சத்துணவு சமையல் உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, டிசம்பா் 23-இல் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாநில பொதுச் செ... மேலும் பார்க்க

துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரம்: ஆளுநருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பல்கலைக்கழக துணைவேந்தா் நியமன தேடுதல் குழு விவகாரத்தில் அரசின் பரிந்துரையை மீறி ஆளுநா் தலையிடுவது தொடா்ந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி... மேலும் பார்க்க

ஜெ.ஜெ. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல்கட்ட பட்டமளிப்பு விழாவில், 572 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக அளவில் தரமதிப்பெண்களைப் பெற்ற 28 மாணவிகளுக்கு பா... மேலும் பார்க்க

புதுகை சிறை வளாக நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில், மாவட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறை வளாக நீதிமன்றத்தில் 41 குற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்... மேலும் பார்க்க