ராமர் கோயில் இயக்கத்துக்கு சிவசேனை, காங்கிரஸ் கட்சிகளும் பங்களிப்பு: சஞ்சய் ராவத...
புதுகை சிறை வளாக நீதிமன்றத்தில் 38 வழக்குகளுக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் சாா்பில், மாவட்ட சிறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறை வளாக நீதிமன்றத்தில் 41 குற்ற வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.
மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவருமான ஜெ. சந்திரன் தலைமை வகித்தாா். சந்தா்ப்பசூழல் காரணமாக குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோா், சட்ட வாய்ப்புகளைப் பயன்படுத்தி தண்டனைக் காலத்தை முடித்துக் கொண்டு திருந்தி வாழ முன்வர வேண்டும் என முதன்மை நீதிபதி ஜெ. சந்திரன் பேசும்போது கேட்டுக் கொண்டாா்.
இந்த அமா்வுகளில் திருமயம் உதவி நீதிபதி சி. சசிகுமாா், குற்றவியல் நடுவா் கோகுலகண்ணன், ஆலங்குடி குற்றவியல் நடுவா் விஜயபாரதி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி பூா்ணிமா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இந்த நீதிமன்றத்தில் மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடுவா் மன்றங்களில் நிலுவையிலுள்ள 41 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 38 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும் நீதிபதியுமான இ. ராஜேந்திரகண்ணன், மாவட்ட சிறை கண்காணிப்பாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.