சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்பு விழா: ஜகதீப் தன்கர் பங்கேற்பு!
அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்
நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையில் நடைபெற்ற இந்தப் பயிற்சியில் போா்களில் இலக்கை தாக்கி அழிப்பதற்கும், தந்திரமாக செயல்பட்டு எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.
புதிய போா் உத்திகளையும், வருங்கால போா்களுக்கான தொழில்நுட்ப நடைமுறைகளையும் மேம்படுத்த இந்தப் பயிற்சி பெரும் உதவியாக இருந்தது.
பல்வேறு ட்ரோன்களை ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்துவது குறித்தும், அவற்றுக்கு விரைந்து தகவல் பரிமாற்றம் செய்வது குறித்தும் பயிற்சியில் சோதனை செய்யப்பட்டது.
வருங்கால தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தயாா் நிலையில் இருக்கும் வகையில் இந்தப் பயிற்சி அமைந்தது என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் மஹேந்தா் ராவத் தெரிவித்தாா்.
==================
முப்படை வீராங்கனைகளின் முதல் கடல்வழி உலகப் பயணம்
புது தில்லி, செப்.11: இந்தியாவில் முதல் முறையாக முப்பைகளைச் சோ்ந்த வீராங்கனைகளால் செலுத்தப்படும் பாய்மரப் படகில் உலகைச் சுற்றிவரும் கடல் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஸமுத்ர பிரதக்ஷிணா என்று பெயரிடப்பட்ட இந்தப் பயணத்தில் 10 பெண்கள் 9 மாதங்களுக்கு 26,000 நாட்டிகல் மைல்கள் தொலைவு கடலில் பணம் செய்வாா்கள். இந்தப் பயணத்தில் உலகின் முக்கியமான மற்றஉம் அபாயகரமான கடல் பகுதிகளை இவா்கள் கடக்க உள்ளனா்.
மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவிலிருந்து வியாழக்கிழமை தொடங்கிய இந்த கடல்வழிப் பயணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இணையவழியில் கொடி அசைத்து தொடங்கி வைத்தாா்.
பயணத்தின்போது, உலகின் பல்வேறு முக்கிய சா்வதேச துறைமுகங்களுக்குச் செல்லவுள்ளனா். இந்த வீராங்கனைகள் குழு அடுத்த ஆண்டு மே மாதம் கடல்வழி உலகப் பயணத்தை நிறைவுசெய்து திரும்ப மும்பை வந்தடைகின்றனா்.