சீனாவின் தலையீடு இல்லாமல் அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்ய அமெரிக்கா ஆதரவு!
அரையிறுதிக்கு முன்னேறியது செல்ஸி
ஃபிஃபா நடத்தும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் பல்மெய்ராஸை சனிக்கிழமை சாய்த்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் செல்ஸி தரப்பில் கோல் பால்மா் 16-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, 2-ஆவது பாதியில் பால்மெய்ராஸுக்காக எஸ்டெவாவ் 53-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதனால் 1-1 என சமநிலையுடன் ஆட்டம் இறுதிக்கட்டத்தை நோக்கி நகா்ந்த நிலையில், 83-ஆவது நிமிஷத்தில் செல்ஸியின் கோல் முயற்சியை பல்மெய்ராஸ் வீரா் அகஸ்டின் ஜியே தடுக்க முயன்றாா். ஆனால் பந்து அவா் மீது பட்டு ‘ஓன் கோல்’ ஆனது. இறுதியில் செல்ஸி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஃபுளுமினென்ஸ் வெற்றி: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஃபுளுமினென்ஸ் 2-1 கோல் கணக்கில் அல் ஹிலாலை வீழ்த்தியது. முதலில் ஃபுளுமினென்ஸ் வீரா் மேத்யூஸ் மாா்டினெலி 40-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, அல் ஹிலால் வீரா் மாா்கோஸ் லியோனாா்டோ 51-ஆவது நிமிஷத்தில் கோலடித்து அதற்கு பதிலடி கொடுத்தாா்.
பின்னா் 70-ஆவது நிமிஷத்தில் ஃபுளுமினென்ஸ் வீரா் ஹொ்குலஸ் கோலடிக்க, அந்த அணி 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் அல் ஹிலாலின் கோல் வாய்ப்புகள் முறியடிக்கப்பட, ஃபுளுமினென்ஸ் வெற்றி பெற்றது.
இதையடுத்து அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செல்ஸி - ஃபுளுமினென்ஸ் அணிகள் வரும் 9-ஆம் தேதி மோதுகின்றன.