செய்திகள் :

அர்ஷ்தீப், வருண் அசத்தல்; அபிஷேக் அதிரடி

post image

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்க்க, இந்தியா, 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து இன்னிங்ஸை ஃபில் சால்ட் - பென் டக்கெட் கூட்டணி தொடங்கியது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ரன்னின்றி வெளியேறினார் சால்ட்.

ஒன் டவுனாக கேப்டன் ஜாஸ் பட்லர் களம் புக, டக்கெட் 4 ரன்களே எடுத்த நிலையில், அர்ஷ்தீப் வீசிய 3-ஆவது ஓவரில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

4-ஆவது பேட்டராக வந்த ஹேரி புரூக், பட்லருடன் இணைந்தார். 3-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில், புரூக் முதலில் வெளியேறினார். 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சேர்த்த அவர், வருண் சக்கரவர்த்தி வீசிய 8-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார்.

தொடர்ந்து வந்த லியம் லிவிங்ஸ்டன், அதே ஓவரில் அதேபோல் பெளல்டாகி ஆட்டமிழந்தார். ஜேக்கப் பெத்தெல் 7, ஜேமி ஓவர்டன் 2, கஸ் அட்கின்சன் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தகுந்த பார்ட்னர்ஷிப் கிடைக்காதபோதும் அதிரடியாக ரன்கள் சேர்த்த ஜாஸ் பட்லர் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 68 ரன்களுக்கு வீழ்ந்தார். வருண் வீசிய 17-ஆவது ஓவரில் அவர் விளாசிய பந்தை நிதிஷ்குமார் ரெட்டி கேட்ச் பிடித்தார்.

பின்னர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 1 பவுண்டரியுடன் 12, மார்க் வுட் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஓவர்கள் முடிவில் கடைசி வீரராக ஆதில் ரஷீத் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு நின்றார்.

இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3, அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அபிஷேக் அதிரடி: அடுத்து, 133 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். உடன் வந்த அபிஷேக் சர்மா அதிரடியாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினார்.

மறுபுறம், கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, திலக் வர்மா களம் புகுந்தார். அபிஷேக் - திலக் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப் பாதையில் கூட்டிச் சென்றது. ஒரு கட்டத்தில் அபிஷேக் கொடுத்த கேட்ச்சை ஆர்ச்சர் தவறவிட்டதற்கான பலனை இங்கிலாந்து அனுபவித்தது.

அதிரடியாக அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்பட 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முடிவில், திலக் வர்மா 3 பவுண்டரிகளுடன் 19, ஹர்திக் பாண்டியா 3 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 2, ஆதில் ரஷீத் 1 விக்கெட் எடுத்தனர்.

அர்ஷ்தீப் சாதனை...

இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் சாய்த்த அர்ஷ்தீப் சிங், டி20 ஃபார்மட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பெளலராக சாதனை படைத்தார். இத்துடன் அவர் மொத்தமாக 97 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக, யுஜவேந்திர சஹல் 96 விக்கெட்டுகளுடன் முன்னணியில் இருந்தார்.

ஏமாற்றம்...

சுமார் ஓராண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்துள்ள பெளலர் முகமது ஷமி, இந்த ஆட்டத்தில் களம் காணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கும் முன் அவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

காலையில் எழுந்தவுடன் காபி குடிக்கிறீர்களா? - ஆய்வில் முக்கியத் தகவல்!

காலையில் எழுந்தவுடன் பலருக்கும் அந்த நாள் தொடங்குவது ஒரு டீ அல்லது காபியில்தான். டீ / காபி குடிப்பது நல்லதா? என்னென்ன நன்மைகள்? பாதிப்புகள் உள்ளனவா? என தொடர்ந்து ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்நி... மேலும் பார்க்க

வல்லான் படத்தின் தணிக்கைச் சான்றிதழ்!

சிந்தர். சி பிறந்தநாளில் ‘வல்லான்’ என்ற புதிய படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. இதில் சுந்தர் சி உடன் தன்யா ஹோப், ஹெபாப் படேல், அபிராமி வெங்கடாசலம் நடித்துள்ளார்கள்.விஆர் மணி செய்யோன் எழுதி இயக... மேலும் பார்க்க

எஸ்கே - 25 படத்தின் பெயர் இதுவா?

சிவகார்த்திகேயன் - சுதா கொங்காரா படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இ... மேலும் பார்க்க

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.Dinapalan - 23.01.2025மேஷம்:இன்று உற்றார்-உறவினர்களும் தங்கள் பங்கிற்கு வீண்பிரச்சினை... மேலும் பார்க்க

லக்ஷயா வெற்றி; சிந்து தோல்வி

ஜகார்த்தா: இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பிரதான வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே தோற்க, லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையரில், லக்ஷயா சென் 21-9... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா தனி முன்னிலை

விக் ஆன் ஸீ: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார். முன்னதாக இணை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்... மேலும் பார்க்க