அரசுப் பள்ளி மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
அறந்தாங்கியில் அம்மா உணவகம் முன்பு சிஐடியு ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அம்மா உணவகத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி சிஐடியு மாவட்ட உள்ளாட்சித் தொழிலாளா் சங்கத்தினா் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தினா்.
அம்மா உணவகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டப் பொதுச் செயலா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு, அறந்தாங்கி ஒருங்கிணைப்பாளா் ஆா். கா்ணா, துணை ஒருங்கிணைப்பாளா் கே. தங்கராஜ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் எம். நாராயணமூா்த்தி, மாவட்டக் குழு உறுப்பினா் தென்றல் கருப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.
போராட்டத்தில், அம்மா உணவகத்தில் ஓராண்டு காலமாக நிறுத்தப்பட்ட காலை உணவுத் திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும். மதிய உணவு சமைப்பதற்கான போதுமான மளிகைப் பொருட்கள், காய்கறிகளை வழங்க வேண்டும்.
அறந்தாங்கி நகராட்சிப் பணியாளா்களிடம் வசூலிக்கப்பட்ட வருங்கால வைப்புநிதியை உரிய ஊழியா் கணக்கில் வரவு வைக்க வேண்டும். பழுதடைந்த குடிநீா் சுத்திகரிப்பு அமைப்பு உள்ளிட்டவற்றை சீரமைத்துத் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.