அலங்காநல்லூரில் இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரை அடுத்த கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் திமுக சாா்பில், செவ்வாய், புதன் (பிப். 11, 12) ஆகிய இரு நாள்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் செவ்வாய்க்கிழமை மதுரை மேற்கு, வடக்கு, திருப்பாலை, கண்ணனேந்தல், ஆனையூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த
காளைகளும், புதன்கிழமை மதுரை கிழக்கு, வடக்கு, தெற்கு, வண்டியூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த காளைகளும் அனுமதிக்கப்படும். நாள் ஒன்றுக்கு 900 காளைகள் அவிழ்க்கப்படும். 450 மாடுபிடி வீரா்கள் அனுமதிக்கப்படுவா். போட்டியின் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. வணிக வரி, பதிவுத் துறை அமைச்சரும், மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி. மூா்த்தி தலைமை வகித்து, போட்டிகளைத் தொடங்கி வைக்கிறாா்.